Wednesday, November 16, 2011

எதிர்பார்க்கிறேன் . . .



வேலைக்கு செல்கையில் ஒரு முத்தம்
வேலை விட்டு வந்ததும் சிறு அணைப்பு . . .
அருகருகே நாம் இருக்கையில்
லேசாய் தலை சாய உந்தன் தோள்கள் . . .
காதருகே சில பல கொஞ்சல்கள்
இலகுவாய் கோர்த்தபடி நம் கைகள் . . .
அவ்வப்போது ஐ லவ் யு, ஐ மிஸ் யு
அதிசயிக்க வைக்க பூங்கொத்து . . .
வெளியே இருந்து ஒரு குறுஞ் செய்தி
காதலுடன் ஒரு மின் அஞ்சல் . . .
கணணி, தொலைக்காட்சி, தொலைபேசி அன்றி
நமதேயான சில பொழுதுகள் . . .
இதையெல்லாம் நான் உன்னிடம் எதிர்பார்க்கிறேன் எனச்
சொல்ல நினைத்தேன் பலதடவை கடைசியில்
இங்கே இப்படிச் சொல்லிவிட்டேன் உன்னிடமே . . .

Wednesday, June 22, 2011

உன் நினைவு . . .



குரங்கை நினைக்காமல் மருந்து குடித்த
கதையாகி விட்டது - என் நிலை . . .
தினமும் இரவில் உன்னைப் பற்றி நினைக்காது
தூங்க வேண்டும் என்பது - என் சபதம் . . .
மறுதினம் எழுகையில் எப்போது உன்னை நினைக்கவில்லை
நான் தூங்கி இருக்க என்றாகிறது - என் கதை . . .

Sunday, June 19, 2011

தூக்கமில்லா இரவுகள் . . .



ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதையாய்
தூக்கத்தில் கனவில் இடம் கேட்பாய் நீ
ஒட்டகம் கூடாரத்தையே பிடித்த கதையாய்
தூக்கமேயின்றி விடிகின்றன என் இரவுகள்
உன் கனவிலும் நினைவிலும் . . .

Friday, March 4, 2011

நீ வருவாய் என . . .




உன்னைப் பார்க்கப் போகும்
ஏக்கம் என் கண்களில் . . .
உன்னோடான பொழுதுகளின்
நினைவலைகள் என் நெஞ்சில் . . .
உன்னோடு நடை போடுகையில்
சிறு நடுக்கம் என் கால்களில் . . .
உன்னை அணைக்கப் போகும்
ஆரவாரத்தில் என் கைகளில் . . .
உன்னை நினைக்கையில்
மெல்லிய புன்னகை என் இதழ்களில் . . .
இத்தனையும் நீ வருவாய் எனும்
என் இனிய எதிர்பார்ப்பில் . . .

Sunday, February 27, 2011

என் போராட்டம் . . .



இருண்ட இரவு விடியும் மட்டும்
உன் கனவுகளோடான போராட்டம் . . .

ஒளிரும் பகல் இருளும் மட்டும்
உன் நினைவுகளோடான போராட்டம் . . .

கனவோடும் நினைவோடும் கழியும் என்
நாட்களில் எப்போது தான் வருவாய் நிஜமாய் நீ . . .