Sunday, January 17, 2010

ஏனோ . . . ?


உன்னைப் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும்
ஒரு சிறு செயலே போதுமானதாக இருப்பதுமேனோ. . .

உன் குரல் அலைபேசியில் கேட்டதும்
என்னுள் ஏதேதோ நடப்பதுமேனோ. . .

உன்னுடன் பகிர வரும் விடயங்களும்
நம் சந்திப்பில் மாயமாவதுமேனோ. . .

உன் கரம் கோர்த்து நடக்கும் வேளையில்
எதையும் சந்திக்கும் தைரியம் வருவதுமேனோ. . .

உன்னைக் கனவில் காண்கையில் கூட
என்னுள்ளே பட்டம் பூச்சிகள் பறப்பதுமேனோ. . .

உன் மேல் வரும் கொள்ளை ஆசையும்
ஒரு நொடியில் கடுங் கோபமாவதுமேனோ. . .

உன்னிடம் இவற்றைக் கேட்க நினைப்பதும்
பின் கேட்டகாமலே விடுவதும் வழமைதானோ. . .

4 comments:

Tharshy said...

:)) ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துகள்

என்னுள்ளே இருந்து . . . said...

உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கொற்றவை. :-)

ரிஷபன் said...

உணர்வுகள் அருமை..

என்னுள்ளே இருந்து . . . said...

ரிஷபன் உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி . . . :-)