குரங்கை நினைக்காமல் மருந்து குடித்த கதையாகி விட்டது - என் நிலை . . . தினமும் இரவில் உன்னைப் பற்றி நினைக்காது தூங்க வேண்டும் என்பது - என் சபதம் . . . மறுதினம் எழுகையில் எப்போது உன்னை நினைக்கவில்லை நான் தூங்கி இருக்க என்றாகிறது - என் கதை . . .
ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதையாய் தூக்கத்தில் கனவில் இடம் கேட்பாய் நீ ஒட்டகம் கூடாரத்தையே பிடித்த கதையாய் தூக்கமேயின்றி விடிகின்றன என் இரவுகள் உன் கனவிலும் நினைவிலும் . . .