
உன்னைப் பற்றி சிந்தித்தாலே
என்னை அறியாமலே புன்னகைக்கிறேன் . . .
நீ செய்த செயல்கள் எல்லாம்
ஓடுகின்றன மனதில் திரைப்படமாய். . .
நீ சிரிக்கும் போது என் கோபமெல்லாம்
சூரியனைக் கண்ட பனித்துளியாய் . . .
எப்படி மாற்றினாய் இப்படி என்னை
என்னிடமே வாதாடுகிறேன் உனக்காய் . . .
உன்னோடு கைகோர்த்து நடந்த பாதைகளில்
மறுபடி நடந்து பார்க்கிறேன் நான் தனியாய் . . .
தூக்கத்தை தொலைத்தேன் உன் நினைவில்
இரவும் பகலும் தினம் கனவில் . . .
என்னோடு நீ உன்னோடு நான்
நமக்கென ஒரு உலகம் கைபேசியில் . . .
2 comments:
இன்னும் கொஞ்சம் வந்திருக்கலாமே
சூப்பர் பாஸ்
சங்கர் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :-)
அந்தந்த நேரங்களில் தோன்றுபவற்றை மட்டுமே இதுவரை பதிந்துள்ளேன்.
அதிகமாய் தோன்றுகையில் மேலே எழுதுகிறேன். நன்றி :-)
Post a Comment